Surprise Me!

விழிப்புடன் இருப்போம் திருட்டை தடுப்போம் என்ற முறையில் வீடு வீடாக சென்று பிரச்சாரம்- வீடியோ

2019-05-18 616 Dailymotion

திருப்பத்தூர் காவல் நிலையம் சார்பாக பொதுமக்களுக்கு திருட்டை வீடுகளில் கொள்ளையை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புடன் இருப்போம் திருட்டை தடுப்போம் என்ற முறையில் வீடு வீடாக சென்று துண்டு பிரசாரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் வேலூர் மாவட்டம் ,திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பதும் நூதன முறையில் கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது இதனை தடுக்கும் வகையில் இன்று திருப்பத்தூர் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் உத்தரவின் பேரில் நகர காவல் ஆய்வாளர் சிரஞ்சீவி தலைமையில் நகர காவல் நிலையம் சார்பாக விழிப்புடன் இருப்போம் திருட்டை தடுப்போம் என்ற வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒய் எம்.சி.ஏ காலனி பகுதியில் வீடுவீடாக சென்று துண்டு பிரசாரம் செய்தார். இதில் அவர் பொதுமக்களுக்கு கூறியதுவெளியூருக்கு செல்லும் பொழுது தங்கள் விலை உயர்ந்த தங்க நகைகள் வெள்ளிப் பொருட்கள் பணம் ஆகியவற்றை வங்கி லாக்கரில் வைத்துவிட்டு செல்லவும் இன்றும் வெளியூர் செல்லும் பொழுது காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும் பெண்கள் நகைகளை அணிந்துகொண்டு நடந்து செல்லும் பொழுது புடைவையை மூடி செல்ல வேண்டும் என்றும் புதிதாக வீடு வாடகைக்கு வருபவர்கள் முழு விலாசம் ஆதார் அட்டை மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை வாங்க வேண்டும் என்றும் மேலும் அவர்களுக்கு சந்தேகம் படியாக இருந்தால் காவல் நிலையத்திற்கு ரகசியமாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் சந்தேக நபர்கள் மற்றும் புதிய நபர்களை தங்கள் பகுதி மற்றும் தெருக்களில் கண்டால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும் என்றும் உறவினர் அல்லாதவர்களையும் புதிய நண்பர்களையும் வடமாநில நபர்களையும் எக்காரணத்தைக்கொண்டும் வீட்டிற்கு அனுமதிப்பதையும் தங்க வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும் தங்கள் பகுதி மற்றும் தெருக்களில் தங்க நகைகளை பாலிஷ் போட்டு தருவதாக வரும் நபர்களிடம் நகைகளைக் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் போது தாங்கள் அணிந்திருக்கும் நகைகளை கழட்டி கைப்பையில் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் இரு சக்கர வாகனங்களை வீட்டின் வெளியில் நிறுத்தும்போது பூட்டி விட்டு செல்ல வேண்டும் என்றும் மேலும் கூடுதலாக முன் ஒயர் லாக் போட்டு பூட்டி வைக்க வேண்டும் என்றும் வங்கிகளில் பணம் எடுத்து வரும்போது சந்தேக நபர்கள் உங்களை கவனத்தை திசை திருப்பி உங்கள் பணத்தை திருடிச் செல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதால் சந்தேக நபர்கள் கூறும் எதையும் நம்ப வேண்டாம் என்றும இரு சக்கர வாகனத்தில் பெட்டி மற்றும் டேங்க் கவரில் பணம் வைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அனைவரும் தங்கள் வீடுகளில் சிசிடிவி கேமரா கண்டிப்பாக பொருத்த வேண்டும் என்றும் சந்தேக நபர்கள் பற்றிய தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி நம்பர் கொடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காவல்துறையினரே திருட்டை தடுக்கும் வகையில் வீடு வீடாக துண்டறிக்கை வழங்கியதை பொதுமக்கள் பாராட்டினார்கள்<br /><br />des : Being vigilant to go home as a way to prevent theft

Buy Now on CodeCanyon