இராமநாதபுரம் மாவட்ட திமுக கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தை ஒட்டி நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமான ஒன்று இன்று மாலை இராமநாதபுரம் தனியார் திருமண மஹாலில் மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் நோன்பாளிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மற்றும் மாவட்ட கழக பொறுப்பாளர் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் இஸ்லாமிய பெருமக்கள் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கணி , நீங்கள் எல்லாம் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தமைக்காக நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் நான் வாக்கு கேட்டு வரும் பொழுது என்ற வெல்லாம் வாக்குறிதி அளித்தேனோ அதையெல்லாம் நிறைவேற்றுவேன் என்றும் தொகுதி மக்களுக்கு என்னவெல்லாம் தேவையே அதை அறிந்து பாராளுமன்றத்தில் பேசி நிறைவேற்றப்படும் என்று பேசினார்.<br /><br />des : Iftar opens on behalf of DMK minority unit in Ramanathapuram district