பாலிவுட்-இல் இருந்து இறக்குமதி.. சிவாவின் மாஸ்டர் பிளான்..!

பாலிவுட்டில் லிப் லாக் மற்றும் சுய இன்பம் காட்சிகளில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கீரா அத்வானியை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

பாலிவுட்டில் லிப் லாக் மற்றும் சுய இன்பம் காட்சிகளில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கீரா அத்வானியை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர் லோக்கல் படம் தோல்வி படமானதால் அடுத்தடுத்த படங்களில் மிகுந்த கவனம் எடுத்து நடித்து வருகிறார். கதை மற்றும் படத்தில் நடிப்பவர்கள் முதற்கொண்டு மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார்கள். அடுத்து நான்கு இயக்குநர்களிடம் இணைந்து மிக வித்தியாசமான கதை களன்களில் நடிக்கிறார்.

தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்தப்படம் கடைக்குட்டி சிங்கம் போல் அனைத்து தரப்பிற்கும் பிடிக்கும் படமாக உருவாகி வருகிறது. இதனையடுத்து இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு சயின்ஸ் பிக்சன் ஃபேண்டஸி படத்தில் நடிக்கிறார். இதனையடுத்து தன் நண்பர் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கிறார். வித்தியாசமான ப்ளாக் காமெடி படமாக அது இருக்கும் என்று தெரிகிறது.

அந்தப்படத்தில் நடிக்க பாலிவுட் கவர்ச்சி நடிகை தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த கீரா அத்வானியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. கீரா அத்வானி மிக தைரியமான பாத்திரங்களில் நடிக்க கூடியவர். லிப்லாக், சுய இன்பம் செய்யும் காட்சிகளில் நடித்து பரபரப்பை கிளப்பியவர்.

கீரா அத்வானியுடன் சிவகார்த்திகேயனுடன் அவரது ஜோடிப் பொருத்தம் எப்படி இருக்கும் என்பது படம் வந்த பிறகே தெரியும். மேலும் இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கும் ஒரு திரில்லர படம், சமீபத்தில் ஹிட்டடித்த அயோக்யா இயக்குநர் வெங்கட் உடன் ஒரு படம் என தனது படங்களை வரிசைகட்டி வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். உறுதியான வெற்றியை தந்து விட கடுமையாக உழைத்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

மிக முக்கிய இயக்குநர்களுடன் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து வருவதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.