தினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல் வரிசையின் இன்றைய விருந்தினர் சிறுவர் இலக்கியப் படைப்பூக்கத் தன்னார்வலரும், எழுத்தாளருமான விழியன் உமாநாத் செல்வன். சிறுவர்களின் குறிப்பாக குழந்தைகளின் படைப்பூக்கத்திறனை செம்மைப்படுத்த வேண்டுமெனில் அதற்கு முதலில் நமது கவனம் திரும்ப வேண்டிய திசை... சிறார் வாசிப்புத் திறனூக்கம். அதை நாம் சரியாகச் செய்கிறோமா என்றால் பெரும்பான்மையினரின் பதில் இல்லையென்றே இருக்கக் கூடும். அதன் அவசியம் பற்றில் விளக்கமாக அறிந்து கொள்வதற்கும், சிறுவர்களின் உளவியலைப் பற்றிய புரிதலை உண்டாக்குவதற்கும் விழியனுடனான இந்த நேர்காணல் நம் வாசகர்களுக்குப் பயன்படலாம். நேர்காணலுக்கான முன்னோட்டம் மட்டுமே இது. முழுமையான நேர்காணல் வரும் வெள்ளியன்று (23.11.18) வெளியாகும்.

விருந்தினர்: எழுத்தாளர், சிறுவர் இலக்கியப் படைப்பூக்க தன்னார்வலர்: விழியன் உமாநாத் செல்வன் | Writer, Child Literary Volunteer Vizhiyan Umanath Selvan

சந்திப்பு: பத்திரிகையாளர்: கார்த்திகா வாசுதேவன் | Journalist Karthiga Vasudevan

ஒளிப்பதிவு : சுவாமிநாதன் கணபதி

படத்தொகுப்பு : ஹேம்நாத்

ஒருங்கிணைப்பு : சவுந்தர்யா முரளி, ஹேம்நாத்