#pollachisexualabusecase #pollachiissues #pollachiassaultcase #arrestpollachirappist

வெளிவராத அதிர்ச்சித் தகவல்கள்

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் டாஸ்மாக் கடைகளே பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்முறை மாதிரியான கொடூரங்களுக்கு அடிப்படை. மதுபோதை மற்றும் இதர போதை வஸ்துக்களின் பெருக்கமே பெண்களை விபரீதமாக அணுகும் தைரியத்தை ஆண்களுக்கு அளிக்கிறது. மதுக்கடைகளைத் தவிர்த்தாலே போதும் இம்மாதிரியான குற்றங்களைப் பெருமளவில் தவிர்த்து விடலாம்... அதோடு பாலியல் வன்முறை விவகாரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களைத்தான் இந்த சமூகம் காலங்காலமாக விமர்சித்து குற்றவாளிகளாகக் கூனிக் குறுகச் செய்து கொண்டிருக்கிறது. எப்போதுமே குற்றம் செய்தவர்கள் தான் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை யாரும் விமர்சிக்கக் கூடாது. அவர்கள் யாரும் இதை பாலியல் இச்சைக்காக செய்யவில்லை. நண்பன் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு திட்டமிட்டு தனித்து வரச் சொல்லி பலிகடாவாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் அந்தப் பெண்களை வக்கிரமான கேள்விகள் கேட்டு மேலும் கூனிக்குறுக வைப்பதை நிறுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதையே முக்கியமாகக் கருத வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களிடம் குற்றமில்லை என நான் நம்புகிறேன். இதை அவர்களது குடும்பமும், நம் சமூகமும் நம்பவேண்டும்.

Connect with Dinamani Online:

SUBSCRIBE to get the latest Interviews Bytes updates: https://www.youtube.com/c/Dinamaniofficial

Dinamani Bytes: https://goo.gl/in1XeM

No Compromise: https://goo.gl/zDRDUk

Sandhippoma:https://goo.gl/dgjjfw

Anamegam :https://goo.gl/gn3L4r

https://www.youtube.com/c/Dinamaniofficial

Visit Dinamani WEBSITE: https://www.dinamani.com/

Like Dinamani on FACEBOOK: https://www.facebook.com/DinamaniDaily/

Follow Dinamani on TWITTER: https://twitter.com/DINAMANI