கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுகவுக்கு
ஒற்றை தலைமை தேவை என்று எம்எல்ஏக்கள்
சிலர் கூறிய கருத்தால் கட்சிக்குள் பூசல் ஏற்பட்டது.

இதையடுத்து மீடியாக்களில் அதிமுக செய்தி
தொடர்பாளர்கள் கருத்து தெரிவிக்க கூடாது
என கட்சி தலைமை உத்தரவிட்டது.

மறு அறிவிப்பு வரும்வரை
யாரும் எந்த கருத்தையும் சொல்லக்கூடாது.
மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என
எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும்
இந்த உத்தரவை நீக்கி உத்தரவிட்டுள்ளனர்.

ஜூலை 1ம் தேதி முதல் அதிமுக செய்தி தொடர்பாளர்கள்
தங்கள் பணியை தொடரலாம் என அறிவித்துள்ளனர்.