மகாராஷ்ட்ரா மாநிலம் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனில் கடம் (36). இவர் மனைவி பிரனாளி (33). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுனிலும் பிரனாளியும் மும்பை அந்தேரியில் ஒன்றாக வேலைபார்த்தபோது காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள். இதற்கிடையே, அலுவலகத்தில் மற்றொரு பெண்ணுடன் சுனில் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த பிரனாளி அவருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

வழக்கம் போல நேற்று முன்தினமும் சண்டை வலுத்துள்ளது. ஆத்திரமடைந்த பிரனாளி கணவரை கொன்றுவிட முடிவு செய்தார். சுனில் படுக்கச் சென்றதும் தண்ணீர் குடிப்பதற்காக கிச்சனுக்குச் சென்ற பிரனாளி, அங்கிருந்த கத்தியை எடுத்துவந்து தன்னுடன் வைத்துக்கொண்டார்.

சுனில் தூங்கியதும் கத்தியால் வயிறு, கழுத்து பகுதியில் சரமாரியாகக் குத்தினார். பிறகு அவரது பெற்றோரிடம் சென்று தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு சுனில் தற்கொலை செய்துகொண்டதாக சொன்னார் பிரனாளி. அவர்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் அவர் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் உடலில் 11 இடங்களில் கத்திக் குத்து விழுந்ததிருப்பதாகத் தெரியவந்தது. தன்னைத்தானே 11 முறை குத்திக்கொண்டு ஒருவர் தற்கொலை செய்ய முடியாது என்று நினைத்த போலீசார், பிரனாளியை தொடர்ந்து விசாரித்தனர். அப்போது அவர், தான் சுனிலைக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.