தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். செப்டம்பர் 22-ஆம் தேதி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவை மரணம் 75 நாட்கள் போராடி வென்றது.<br /><br />அவரது மரணத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் சோகத்தில் ஆழ்ந்தது. மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதாவுக்கு தினமும் அஞ்சலி செலுத்த கூட்டம் அலை மோதுகிறது.<br /><br />இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 16-ஆவது நாள் நினைவு தினைத்தையொட்டி தமிழகம் முழுவதும் அவரது அபிமானிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை, மெரீனா, பெரம்பூர், எக்மோர், கோயம்புத்தூர், திருச்சி, நாகை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 16-ஆம் நாள் நினைவு தினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #Karthik Subbaraj #dhanush