உண்டியலில் சேர்த்து வைத்த 5200 ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கிய 6 ஆம் வகுப்பு சிறுவன் - தொகுப்பு ஸ்டாலின்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், அதற்கு ஏற்றவாறு அளிக்க நிதி திரட்டுவற்கும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேற்கு தாம்பரம், கஸ்தூரிபாய் நகர், கல்யாணசுந்தரம் தெருவில் உள்ள 6ம் வகுப்பு படித்து வரும் சல்மான் பரிஇப் தனது பெற்றோர் தினமும் வழங்கும் பணத்தை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்திற்காக உண்டியலில் சேர்த்து வைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் தான் உண்டியலில் சேர்த்து வைத்த பணம் 5200 ரூபாயை கொரோனா நிவாராண நிதிக்கு வழங்க வேண்டும் என அவரது பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து சல்மான் நேற்று தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று பரங்கிமலை காவல் துணை ஆணையர் பிரபாகர் முன்னிலையில் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமாரிடம் அவர் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 5200 ரூபாய் பணத்தை ஒப்படைத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் இடம் வழங்கி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிடும் படி கோரிக்கை விடுத்தார்.

இதனை பெற்றுக்கொண்ட பரங்கிமலை காவல் துணை ஆணையர் பிரபாகர் மற்றும் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் ஆகியோர் சிறுவன் சல்மானுக்கு நன்றி கூறியதுடன் அவரது உதவிக்கு பாராட்டுக்கள் தெரிவித்து அவரை ஊக்கப்படுத்தினர்.

Subscribe - http://bit.ly/HinduTamilThisai
Channel - https://www.youtube.com/tamilthehindu
facebook - https://www.facebook.com/TamilTheHindu
Twitter - https://twitter.com/TamilTheHindu
Website - https://www.hindutamil.in/