"வீட்டுல ஒரு தோட்டம் இருந்தால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறதோடு, மனசு எப்போதும் ரிலாக்ஸா இருக்கும். மண்வாசனை நிறைஞ்சிருக்கும் இந்த இடத்துக்கு வந்துட்டா கவலையெல்லாம் காணாமல் போயிரும்” - மாடி முழுவதும் பசேலென்று பரவியிருக்கும் தன்னுடைய செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டே பேச ஆரம்பிக்கிறார் யோகலட்சுமி.
பழங்கள், காய்கறிகள், பூக்கள், மூலிகைகள் என 350-க்கும் மேற்பட்ட தொட்டிகளுடன் சென்னை, கோவிலம்பாக்கத்தில் ஏழு வருடங்களாகத் தன் வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார்.

Producer - S.SuryaGomathi
Video - P.Priyanka
Edit - K.Senthilkumar
Executive Producer - Durai.Nagarajan