பொதுவாக சிவாலயத்தில் கருவறை வெளிச்சுவரில் தென்முகம் நோக்கி தட்சிணாமூர்த்தி அமர்ந்து அருள்புரிவார். ஆனால், திருப்புரம்பியம் கோயிலில் ராஜகோபுரத்துக்கு வெளியே தட்சிணாமூர்த்தி, தனிக்கோயில் கொண்டு கருணையே வடிவாகி அருள்புரிந்து வருகிறார். குருப்பெயர்ச்சி - 2019 ஐ முன்னிட்டு குருவருள் வழங்கும் தட்சிணாமூர்த்தி தரிசனம் உங்களுக்காக...
