Surprise Me!

தீராதப்பிணிகளைத் தீர்த்து வைக்கும் ஸ்ரீதன்வந்த்ரி மகா ஹோமம் - 27-9-2020

2020-10-09 3 Dailymotion

Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx<br /><br /> தேவ யக்ஞத்தில் மிக சிறப்பானது ஸ்ரீதன்வந்த்ரி மகாஹோமம். உடல் ஆரோக்கியத்துக்காகச் செய்யப்படும் இந்த ஹோமத்தால் ஆரோக்கியத்தின் கடவுளான ஸ்ரீதன்வந்த்ரி பகவான் மகிழ்ச்சி அடைந்து பூரண ஆரோக்கியத்தை அருளுவார் என்பது ஐதிகம். ஆன்மிக சேவையில் தன்னை எப்போதும் ஈடுபடுத்திக் கொள்ளும் உங்கள் சக்தி விகடன் - திருவடிசூலம் ஸ்ரீஆதி பரமேஸ்வரி ஸ்ரீகருமாரியம்மன் அறக்கட்டளை இணைந்து வாசகர்களாகிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பூரண நலன் வேண்டி இந்த ஹோமத்தை நடத்தியது. பிரத்தியேகமான ஹோம திரவியங்களும், விலை உயர்ந்த ஆகுதிகளும் கொண்டு முறைப்படி இந்த ஹோமம் நடைபெற்றது. முறைப்படி வேதம் பயின்ற சிரோன்மணிகளைக் கொண்டே இந்த ஹோமம் நடைபெற்றது. திருவடிசூலம் சப்த சைலஜ ஸ்ரீபாதாத்ரி நூற்றியெட்டு திவ்யதேசத்தில், தேவி ஸ்ரீகுகயோகி மதுரைமுத்து ஸ்வாமிகள் முன்னிலையில் நடைபெற்ற மகா தன்வந்த்ரி ஹோம வைபவத்துடன், ஆலயத்தில் சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீதன்வந்த்ரி பகவானுக்குத் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான வாசகர்கள் இணையத்தின் வழியே பதிவு செய்து இந்த ஹோம சங்கல்பத்தில் பங்கு பெற்றார்கள்.<br /><br />2020 தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் : https://bit.ly/2WZXKMO

Buy Now on CodeCanyon