"நான் ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதாவுடன்தான் இருந்தேன். திடீரென ஒருநாள் என்னை வெளியற்றி விட்டார். அவரோட சொத்துக்கள் பத்தி எல்லாம் தெரிஞ்ச என்னை அவமானப்படுத்துனதுக்கு 'உன்னை எப்படி அவமானப்படுதுறேன்னு பாருன்னு' கோபத்துல போட்ட வழக்குதான் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு. நான் செஞ்சது எட்டப்பன் வேலைதான். ஆனா, எனக்கு அப்ப வேறவழி தெரியல'' என்று வழக்கு தொடர்ந்து 20 வருடங்கள் கடந்த பிறகும் அதே கோபத்தோடு சொல்கிறார் வழக்கறிஞர் வெங்கட்ராமன். இன்று, தமிழக அரசியலையே மாற்றியுள்ள இந்த வழக்கு, ஒரு சிறு மனஸ்தாபத்தில் உருவானதுதான். சொத்துக்குவிப்பு வழக்கின் வரலாறு குறித்து மேலும் நம்மிடம் விவரிக்கிறார் வெங்கட்ராமன்.
