அருவி என்றால், என் போன்ற ‘இளசுகளுக்கு’ இப்போதெல்லாம் ‘அருவி’ ஹீரோயின் அதிதிதான் ஞாபகத்துக்கு வருகிறார். டூர் பார்ட்டிகளுக்கு என்றால் சாய்ஸே இல்லை; குற்றாலம்தான். ‘பப்பரபப்பப்பப்பேங்..’ என்று ‘அருவி’ பட தீம் மியூசிக் பேக்ரவுண்டோடு குற்றாலத்துக்குப் போனால், வெயிலுக்கு எல்லோரும் எண்ணெய்க் குளியல் போட்டு அருவியை அதகளம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். ‘கூட்டம் என்றால் அலர்ஜி’ என்று நினைப்பவர்களுக்கு, குற்றாலத்தை விட்டால் இன்னொரு ஆப்ஷன் இருக்கிறது. அது, குண்டாறு.<br /><br /><br /><br />gundaaru travel experience