பல நேரங்களில் நாம் அலட்சியமாகச் செய்யும் சின்னச் சின்ன விஷயங்கள் எந்த அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது நமக்குப் புரிவதில்லை. பிளாஸ்டிக் பயன்பாடு தொடங்கி இதுமாதிரியான சிறிய விஷயங்கள்தான் நம்முடன் இந்தப் பூமியைப் பகிரும் மற்ற உயிரினங்களைப் பெருமளவில் பாதிக்கின்றன. அப்படி ஒரு பாதிப்பு படம்பிடிக்கப்பட இப்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைத் தொடங்கியிருக்கிறது ஒரு புகைப்படம்.
