பெற்றோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதால், அவர்களது 7 வயது மகனின் பிறந்தநாளை காவல்துறையினர் கொண்டாடியுள்ளனர்.<br /><br />மகாராஷ்டிராவின் தானே நகரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், தனது 7 வயது மகனின் பிறந்தநாளை கொண்டாட முடியாமல் போனதால், ட்விட்டரில் அதனை பதிவிட்டு வருத்தம் தெரிவித்திருந்தார். தானும், தனது மனைவியும், கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், <br />தங்கள் மகன் பாட்டி வீட்டில் இருப்பதாகவும் கூறியிருந்தார். தானே காவல்துறையை டேக் செய்திருந்த அவர், தனது மகனுக்கு போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், அவரை நேரில் சந்தித்து வாழ்த்துமாறும் கோரிக்கை விடுத்திருந்தார். #viral #hbd