Surprise Me!

மாஸ்க் போடலைன்னா சாதி என்னன்னு கேப்பீங்களா?’ - திருப்பூர் போலீஸ் சர்ச்சை!

2020-11-06 1 Dailymotion

Reporter - நவீன் இளங்கோவன்<br /><br />மாஸ்க் அணியாமல் பைக்கில் வந்தவரிடம், சாதி குறித்து போலீஸார் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.<br /><br />திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் நடராஜன், வேலுச்சாமி, காசிராஜா ஆகியோர் பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவினாசியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் மாஸ்க் அணியாமல் பைக்கில் வந்திருக்கிறார். (சிவக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அவினாசி ஒன்றியச் செயலாளராக இருக்கிறார்). சிவக்குமாரை தடுத்து நிறுத்திய காவலர் காசிராஜா, `ஏன் மாஸ்க் போடலை. பேர் அட்ரஸ் சொல்லுங்க...’ என விவரங்களை விசாரித்ததோடு, சாதி குறித்தும் கேட்டிருக்கிறார்.

Buy Now on CodeCanyon