‘ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மீது புகார் ஏதேனும் வந்தால் நடவடிக்கை எடுக்கவும்’ என்று அனைத்து மாவட்ட காவல்துறையினருக்கும் வாய்மொழி உத்தரவு போனதாகச் சொல்கிறார்கள். அது உண்மைதான் என்பதுபோல நடக்கிற சம்பவங்கள் காட்டுகின்றன. புதிய அமைச்சரவை பதவியேற்ற சில மணி நேரத்தில், சென்னையில் ஓ.பி.எஸ் வீட்டுக்கே வந்து ஒரு கும்பல் கல் வீசியிருக்கிறது. இதில் கட்சியினர், காவல் துறையினர் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். போலீஸ்காரர்கள் தாக்கப்பட்டும் மாநகர காவல் துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.