Surprise Me!

நோ மீட்டிங்...நோ ஈட்டிங் - பேச்சாளர்கள் பற்றி தெரியுமா ?

2020-11-06 1 Dailymotion

"கூட்டத்தில் பேசிய கழகப் பேச்சாளர் அதிரடி அல்தாப், 'நோ மீட்டிங்...நோ ஈட்டிங்' என நிலைமையை விவரித்துவிட்டு, 'சாப்பிடவே வழியில்லை. பேச்சாளர்கள் பிச்சைக்காரர்களாக மாறிவிட்டனர். நீங்கள் நட்சத்திர ஓட்டலில்வைத்து மீட்டிங் நடத்துகிறீர்கள்' எனப் பேசிக்கொண்டே போக, ஸ்டாலின் முகம் இறுகியது. அடுத்துச் பேச வந்த பேச்சாளர் ஒருவர், 'புதுக்கோட்டை விஜயா' கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக இருக்கிறார். இவருக்கு ஆல் இன் ஆலாக இருக்கும் ஆரணி மாலாவுக்கு, பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கின்றனர். நான் விஜயா வீட்டில் எடுபிடி வேலைபார்க்க விரும்பவில்லை. அதனால், எனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை' எனக் குமுறலை வெளிப்படுத்தினார். அடுத்துப் பேச வந்தவர், 'ஐம்பது பேருக்குக்கூட வெளியூரில் பேசுவதற்கு வாய்ப்பு வாங்கித் தர முடியவில்லை. நீங்கள் என்ன கொள்கைப் பரப்புச் செயலாளர்? யாருமே கூட்டத்தை நடத்துவதில்லை. எங்களுக்கும் பேச்சுக் கலை மறந்துபோய்விட்டது. நான் லோக்கலில் பேசினால் 200 ரூபாய் கொடுங்கள். வெளியூரில் பேசுவதற்கு 500 ரூபாய் கொடுங்கள். சீப் அண்ட் பெஸ்ட் பேச்சாளர் நான்தான்' என கதிகலங்கவைத்தார்.

Buy Now on CodeCanyon