இரு நாட்டுக்கும் இடையிலான பிரச்னை ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்கா, 'கொரிய தீபகற்பத்தில் அனுமதியின்றி எந்தவித அணு ஆயுத சோதனையும் வட கொரியா செய்யக் கூடாது' என்று கறாராக கூறிவந்தது. ஆனால், இதைப் பொருட்படுத்தாமல் வட கொரியா, 'அமெரிக்காவின் பேச்சுக்கெல்லாம் கட்டுப்பட முடியாது. எங்கள் பாதுகாப்புக்காக நாங்கள் எந்தவித சோதனை வேண்டுமானாலும் நடத்துவோம்' என்று தொடர்ச்சியாக வல்லரசின் அச்சுறத்தலை புறந்தள்ளியது.
