கண்களை உருட்டிக் கோபப்படுவதும், கண்கள் கவர காதலில் விழுவதும், அம்மன் வேடத்தில் முறைப்பதும்... என, டிவி ப்ரியர்களின் ஃபேவரைட் ஆகிவிட்டார் ‘சரவணன் மீனாட்சி’ Rachitha. சின்னத்திரையின் லவ்வர் கேர்ள் இவர். பெங்களூரு பொண்ணு தமிழ் பேசக் கற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், இப்போது முத்து முத்தாக எழுதவும் செய்கிறார். “உங்க பெயர் என்ன சொல்லுங்க, எழுதிக்காட்டுறேன்” என்று சிரிக்கிறார் ரச்சிதா. விஜய் தொலைக்காட்சி விருதில் இரண்டாவது முறையாக ஃபேவரைட் நடிகைக்கான விருதும் பெற்றுவிட்டார்.
