தமிழக அரசியலில் பல இரவுநேர பரபரப்புகள் மக்களை பாடாய்ப் படுத்தியிருக்கிறது... சில ஆண்டுகள் முன்னே சென்றால், தி.மு.க. தலைவரான கருணாநிதி நள்ளிரவில் கைது, லட்சக் கணக்கான அரசு ஊழியர்கள் பணியிலிருந்து டிஸ்மிஸ்... அரசு தாடண்டர் குடியிருப்பில் நுழைந்து நள்ளிரவில் ஊழியர்கள் கை-கால் உடைப்பு, சிறை, இளம்பெண் ஷெரீனா மீது கஞ்சா வழக்குப் பதிவு செய்து நள்ளிரவில் கைது என பட்டியல் நீளமான காமிக்ஸ் போல ஓடிக் கொண்டே இருக்கும்... இவையனைத்தும் ஜெயலலிதா முதல்வராக இருந்த ஏக காலத்தில் நடந்தவை. முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவனையில் இருந்தபோதும், அதன்பின்னரும் (செப்டம்பர் 2016 டு ஏப்ரல் 2017") ஆறுமாத தமிழக ஆட்சியில் நடந்துள்ள 13 சம்பவங்களின் தொகுப்பு இங்கே....