ஐந்து வயதுக் குழந்தை கொழுக்மொழுக் உடல்வாகுடன் பள்ளிக்குச் செல்வதைப் பார்க்க முடிகிறது.<br />20 வயதுகூட நிரம்பாத இளம்பெண், தன் வயதுக்குச் சற்றும் பொருந்தாத பருமனுடன் வண்டி ஓட்டிச் செல்வதைக் காண முடிகிறது. ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று தெரியாமல், உடல் பருமன் பிரச்னையில் தவிப்பவர்கள் பலர்.