தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 'அமெரிக்காவில் இருந்து வந்ததும் வழக்கமான மருத்துவ உதவிகள் அவருக்கு வழங்கப்பட்டு வந்தன. கடுமையான மூச்சுத் திணறலுக்கு ஆளாகியதால்தான், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் விஜயகாந்த்' என்கின்றனர் தே.மு.தி.க வட்டாரத்தில். <br />சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த். இதுகுறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதும், உடனடியாக அறிக்கை வெளியிட்டது தே.மு.தி.க தலைமை அலுவலகம். <br /><br />#Vijayakanthhealthcondition #Vijayakanthhealthreport #CaptainVijayakanth #DMDK