இப்போது பொறியியல், பட்டப்படிப்புகள் படித்து, பல லட்சம் வரை சம்பளம் தரும் வேலைகளை உதறித் தள்ளிவிட்டு,'நான் விவசாயம் பார்க்க போகிறேன்' என்று தைரியமாக சேற்றில் கால்பதிக்கும் இளையதலைமுறை உருவாகியிருக்கிறது. இதற்குக் காரணம், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் விதைத்த விழிப்புஉணர்வு விதைதான். கார்த்திகேயனும் அந்த ரகம்தாம். பொறியியல் படிப்பு, கைநிறைய சம்பளம் தந்த வேலை எல்லாவற்றையும் உதறிவிட்டு, இன்று பால் கறந்து வீடு வீடாக விற்பனை செய்கிறார்; இயல் வழி உணவகம் என்ற பெயரில் இயற்கை உணவகத்தையும் நடத்தி வருகிறார்.