Surprise Me!

கதறும் தாய்..குழந்தையை மீட்பதில் என்ன சிக்கல்? #prayforsurjith

2020-11-06 0 Dailymotion

திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் பல்வேறு குழுவினர் ஈடுபட்டுவருகிறார்கள். நேற்று மாலை 6 மணி முதல் தொடர்ந்து 17 மணி நேரத்துக்கும் மேலாக மீட்புப் பணி நீடித்துவருகிறது. மதுரை மணிகண்டன், திருச்சி டேனியல், கோவை வெங்கடேஷ் குழுவினர் உள்ளிட்டோர் தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினரோடு இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதேபோல், சென்னையைச் சேர்ந்த அன்பறிவ் குழுவினரும் மீட்புக் குழுவோடு இணைந்திருக்கிறார்கள்.

Buy Now on CodeCanyon