புதுச்சேரி அரபிந்தோ ஆசிரமம் அருகே சிலர் வாடகைக்கு சைக்கிள் ரிக்ஷா ஓட்டி வருகின்றனர். அவர்களிடம் ஒரு காகம் கடந்த ஐந்து வருடங்களாக நண்பர்களாக பழகி வருகிறது. மேலும் தினமும் ரிக்ஷா ஓட்டுநர்கள் அளிக்கும் உணவை உண்ணுகிறது. இந்த காகம் கடந்த 52 நாள் ஊரடங்கு உத்தரவை அடுத்து ஓட்டுநர்கள் வராத காரணத்தால் உணவின்றி தவித்த காகம் வேறு இடம் சென்றது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு வந்த ஓட்டுநர்கள் காகத்தை காணாமல் மனம் கலங்கினர். தற்போது இன்று எங்கிருந்தோ திடிரென வந்த காகம் ஓட்டுநர்கள் வழங்கிய உணவை உண்டது. இதனை இதனை எதிர்பாராத ரிக்ஷா ஓட்டுனர்கள் மிகவும் ஆனந்தமடைந்தனர். காகமும் ஓட்டுனர்களும் மீண்டும் இணைந்ததை அப்பகுதி பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். #LockDown #Puducherry

- ஜெ.முருகன்
அ.குரூஸ்தனம்

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India