பனைமர ஓலைகளை வெட்ட நபர் ஒருவர் பனைமரத்தின் உச்சிக்கு சென்று இயந்திரம் கொண்டு அதனை வெட்டும் செயல் பார்ப்பதற்கே வியப்பை ஏற்படுத்தும் படி அமைத்துள்ளது. பலரும் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.<br />பனை மரத்தில் ஏறி நபர் ஒருவர் அதன் விசிறி வடிவ ஓலைகளை வெட்டும் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.<br />பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையாது. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 எண்ணிக்கை வரையிலான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும். பனையேறுதல் என்பது பருவகாலத் தொழில். #Viralvideo