Surprise Me!

ஆண்டுக்கு 80 லட்சம் ரூபாய் டர்ன் ஓவர்! chocolate தம்பதி! #chocolate

2020-11-06 7,821 Dailymotion

Reporter - கு.ஆனந்தராஜ்<br />Camera - வி.சதிஷ்குமார்<br />இந்தியாவில் சாக்லேட் விற்பனையில் ஆண்டுக்கு 12,000 கோடி ரூபாய் வர்த்தகம் நடக்குது. அதில், 95 சதவிகிதம் உண்மையான சாக்லேட்டே கிடையாது. ஆரோக்கியமான சாக்லேட் உற்பத்தியை மேற்கொண்டால், தயாரிக்கிறவங்களும் மக்களும் ஒருசேர பயனடையலாம். அந்த முன்னெடுப்புடன்தான் சாக்லேட் தயாரிப்பில் இறங்கினோம்” – சுவை பட பேசுகிறார்கள், பூனம் சோர்டியா – நிதின் தம்பதி. சென்னையிலுள்ள இவர்களின் ‘KOCOATRAIT’ நிறுவனத்தின் மூலம் இயற்கை விவசாய உணவுப்பொருள்களைக்கொண்டு சாக்லேட் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.<br />“ரெண்டு பேருக்கும் பூர்வீகம் ராஜஸ்தான். பல வருஷங்களுக்கு முன்பே சென்னையில் குடியேறிட்டோம். கல்யாணத்துக்குப் பிறகு டெல்லி, மும்பையில் சில வருஷங்கள் இவர் வேலை செஞ்சார். குழந்தையைக் கவனிச்சுக்கிட்டு நான் வீட்டுல இருந்தேன். பிறகு, அமெரிக்காவில் சில வருஷங்கள் வேலை செய்தவர், ஒருகட்டத்துல அந்த வாழ்க்கைமுறை பிடிக்காம சென்னை வந்துட்டார். எங்களுக்கு ஏற்கெனவே உணவுத்துறையில் அனுபவம் இருந்ததால, தரமான ஹோம்மேடு சாக்லேட் தயாரிக்கத் திட்டமிட்டோம். சாக்லேட் உற்பத்தி அதிகம் நடக்கும் பெல்ஜியம் உட்பட சில நாடுகளுக்குப் போய் நுணுக்கங்களைக் கத்துக்கிட்டோம். சாக்லேட்டின் சுவை அறிவதற்காக லண்டன்ல நிதின் பிரத்யேக பயிற்சியும் எடுத்துக்கிட்டார். #chocolatelover #choco #Chocolate

Buy Now on CodeCanyon