Surprise Me!

ஷிவானியோடு ஆட்டம் ஆட... அடுத்து bigboss வீட்டுக்குள் போகும் போட்டியாளர்! #biggboss

2020-11-06 48,415 Dailymotion

Reporter - அய்யனார் ராஜன்<br />பிக்பாஸ் வீட்டுக்குள் ஏற்கெனவே இருக்கும் பஞ்சாயத்து போதாதென இன்னொரு போட்டியாளரை உள்ளே இறக்குகிறது விஜய் டிவி.<br />2020 சீசனில், பிக்பாஸ் வீடு ஒரு நொடிகூட சண்டையில்லாமல் இருந்துவிடக்கூடாது என்கிற முனைப்போடு போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் விஜய் டிவி, இந்த முறை கைகலப்பு இல்லாமல் சீசனை முடிக்கக்கூடாது என முடிவெடுத்துவிட்டதுபோலத் தெரிகிறது. ஏற்கெனவே அர்ச்சனா, சுச்சியை இறக்கிவிட்டு வகைதொகையில்லாமல் கன்டென்ட் தேற்றுபவர்கள், இந்த முறை இன்னும் உக்கிரமாக இறங்கியிருக்கிறார்கள்.<br />பிக்பாஸ் சீசன் - 4 வீட்டின் ஹீரோவாக கெத்துக்காட்டி, எந்நேரமும் ஆர்ம்ஸை முறுக்கியபடியே சுற்றிவரும் பாலாஜியை மிரட்ட வருகிறார் ஷிவானியின் ரீல் ஹீரோ. ஆமாம், ஷிவானியின் காதலராக சீரியல் ரசிகர்களால் கிசுகிசுக்கப்பட்ட அஸீம்தான் இன்னும் சில நாள்களில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையப்போகும் 19-வது போட்டியாளர். #bigboss #Biggbossshivani #shivani fansclub #shivanifans

Buy Now on CodeCanyon