திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மருள் பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள ரயில்வே கீழ்மட்ட சுரங்கப்பாதையில் ஒரு மாதமாக தேங்கியுள்ள மழை நீரால் பொதுமக்கள் அவ்வழியை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.. மழை பெய்தால் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்குவது, அதை வெளியேற்றும் வரை அவ்வழியே பயணிக்கும் மக்கள் காத்திருப்பதும் தொடர்கதையாக உள்ளது, அவ்வப்போது இவ்வழியே செல்லும் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்து மீட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.<br /><br />car floating in rainwater at tirupur district