Surprise Me!

நாப்கினை எப்படி? யார் எல்லாம் பயன்படுத்த வேண்டும்? A to Z Tips #health

2021-01-12 5 Dailymotion

Reporter - ஆர்.வைதேகி<br />ஒரு பெண் சராசரியாகத் தன் வாழ்நாளில் 35 வருடங்கள் மாதந்தோறும் மாதவிடாயைச் சந்திக்கிறாள். அத்தனை வருடங்களிலும் அவள் உபயோகிக்கும் நாப்கின்களின் தோராய எண்ணிக்கை 16 ஆயிரம். 1970களின் இறுதியில் இந்தியாவுக்கு அறிமுகமானவை நாப்கின்கள். அதுவரை துணிகளுக்கே பழகியிருந்த பெண்களுக்கு நாப்கின்களுக்கு மாறுவதில் சின்ன தயக்கம் இருந்தது. 2015-16ல் எடுக்கப்பட்ட தேசிய குடும்பநல சர்வேயின் படி, 77 சதவிகித நகர்ப்புற பெண்களும் 47 சதவிகித கிராமத்துப் பெண்களும் துணியிலிருந்து சானிட்டரி நாப்கினுக்கு மாறியிருப்பது தெரிகிறது. மாதவிடாய் கால அவதிகளுக்கு விடுதலை அளிப்பதாக, சுகாதாரமானதாக, உபயோகிக்க எளிதானதாக, நோய்களிலிருந்து காப்பதாக... இப்படிப்பட்ட உத்தரவாதங்களுடன் மெள்ள மெள்ள பெண்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக இடம்பிடித்தன நாப்கின்கள்.<br /><br /><br />பல வருட உபயோகத்துக்குப் பிறகு நாப்கின்களாலும் பிரச்னைகள் ஏற்படுவதாகப் புகார்கள் எழத் தொடங்கின. சாதாரண அலர்ஜியில் தொடங்கி, புற்றுநோய்வரை பல பிரச்னைகள் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது.

Buy Now on CodeCanyon