பயிர்களுக்குத் தேவையான நீர் கிடைப்பதே தற்போதைய காலகட்டத்தில் பெரும் சவாலாக உள்ளது. வாய்க்கால் மடையைத் திருப்பி நீர்ப் பாசனம் செய்தது மாறி, விவசாயிகள் சொட்டுநீர்ப் பாசனத்தின் பக்கம் திரும்பிவிட்டனர். ‘கிடைக்கும் நீரைப் பொறுத்தே விவசாயம்’ என்றாகிவிட்ட நிலையில், நீரை வீணாக்காமல் பயன்படுத்தி மகசூல் பெறுவதுதான் முக்கியம். அந்த வகையில், தென்னைச் சாகுபடியில், நீர் தேவையைக் குறைக்க, தென்னை மரத்தின் தூரைச் சுற்றிலும் நீர் முழுமையாகக் கிடைக்கும்படி சொட்டுநீர்க் குழாயை அமைத்துள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த விவசாயி சிவகுமார்.

Reporter - E.Karthikeyan
Video - L.Rajendran
Edit - Divith
Executive Producer - DuraiNagarajan