Surprise Me!

ஒன்றியப்பெருந்தலைவர் மீது அடுத்தடுத்து புகார் அதிமுக - பாஜக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

2021-08-09 62 Dailymotion

7 மாதங்களாக எந்த ஒரு கூட்டமும் நடத்தாமல், சாக்குபோக்கு கூறிய ஒன்றியக்குழுத்தலைவர், எந்த வித அடிப்படை வசதிகளையும் செய்து தராத நிலையில், ஏராளாமான புகார்கள் இருந்த நிலையில், ஒன்றியக்குழுத்தலைவர் பதவியை தக்க வைத்து கொள்ள திமுக விற்கு மாறிய ஒன்றியக்குழுத்தலைவரின் முதல் கூட்டம் அதிமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் வெளிநடப்பு – ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்ட்தாக ஆதரப்பூர்வமாக அறிக்கை விட்டு, வெளியேறிய கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு<br /><br />கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவராக இருப்பவர் வள்ளியாத்தாள், இவரது கணவர் அதிமுக வில் ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்தவர், இந்நிலையில், இவர் சுமார் 7 மாதங்களாக ஒரு கூட்டம் கூட நடத்தாமல், சாக்கு போக்கு கூறி வந்த நிலையில் வாக்களித்த மக்கள் தங்கள் பிரச்சினைகளை கூறி மனுக்கள் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஏராளமான முறைகேடுகளிலும் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. அனைத்து கவுன்சிலர்களும் ஒன்று கூடி இவரை பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிகின்றது. இந்நிலையில், திமுக ஆட்சி அமைந்தவுடன் இவரது பதவியை தக்க வைத்து கொள்ளவும், ஒன்றியக்குழுத்தலைவர் பதவி பறிபோய் விடுமே என்கின்ற காரணத்தினால், ஒன்றியக்குழுத்தலைவர் வள்ளியாத்தாள் அவர்களும், அவரது கணவர் குருசாமியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அறிவாலயத்தில் இணைந்தனர். இந்நிலையில்,. இவர்கள் கட்சி மாறிய பின்னர் முதல் கூட்டத்தினை இன்று நடத்தினர். இந்நிலையில் திமுக ஒன்றியக்குழுத்தலைவராக மாறிய வள்ளியாத்தாள் மன்ற அங்கீகாரம் இல்லாமல், ஒரு சில வேலைகளுக்கு நிதி எடுக்க கூடாது என்று தெரிந்தும் மன்ற விதிகளை மீறி, நடந்த்தாகவும், அருகாமையில் உள்ள கதர் கடை இருக்கும் போது, 30 கி.மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள கடையில் பொருட்கள் வாங்கியதும், தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 ஐ மீறியதாகவும் என்று கூறி அதிமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் அனைவரும் கூண்டோடு வெளிநடப்பு செய்தனர். மேலும், இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற அவர்கள், அவரது பதவி மீது நடவடிக்கை எடுக்குமாறும் மனு அளித்தனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பினையும் சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது

Buy Now on CodeCanyon