Surprise Me!

காவலரை தாக்கிய அஜித் ரசிகர்கள் - புடிச்சு ஜெயிலில் போட்ட போலீஸ்!

2022-02-25 5 Dailymotion

திருச்சியில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வௌியிடப்பட்டது. ரசிகர்கள் உற்ச்சாகத்துடன் மேல தாளங்களுடன் கொண்டாடி வந்தனர்.<br />இந்நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அன்பு தியேட்டரிலும் வலிமை படம் வௌியானது. முதல் காட்சியில் அஜித் தோன்றிய காட்சியை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் திரைக்கு அருகில் சென்று துள்ளி குதித்துள்ளனர். அப்போது தீ தடுப்பான மண் வாளியை எடுத்து கொண்டு நடனம் ஆடி உள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் சுரேஷ், ரசிகர்களை இருக்கையில் அமர்ந்து படம் பார்க்க அறிவுறுத்தி உள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அஜித் ரசிகர்கள் போலீஸ்காரரை தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த அவர் லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Buy Now on CodeCanyon