Surprise Me!

மின் இணைப்புக்கு லஞ்சம்; கம்பி எண்ண அழைத்த அதிகாரிகள்!

2022-02-26 76 Dailymotion

செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்,45, இவருடைய மனைவி முனியம்மாள்,40, பால் குளிரூட்டும் கடைக்கு, மின் இணைப்பு வேண்டி, கல்லாவி ஈ.பி. ஆபீஸில், 17,000 ரூபாய் கட்டி மனு கொடுத்துள்ளார். ஈ.பி. ஆபிஸ் இளநிலை பொறியாளர் ராஜேஷ்,42, மின் இணைப்பு வழங்க 10,000 ரூபாய், லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணன், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையிலான போலீசார், கிருஷ்ணனிடம் 500 ரூபாய் நோட்டுகளை, 10,000 ரூபாய் ரசாயனம் தடவி கொடுத்து, அதனை ராஜேஷிடம் கொடுக்க வைத்துள்ளார். பணம் வாங்கிய ராஜேஷை மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கையும் களவுமாக பிடித்தது விசாரித்து வருகின்றனர்.

Buy Now on CodeCanyon