சேலம் மாவட்டம் கருப்பூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது இன்று காலை தலைவர் 4வது வார்டு சேர்ந்த சுலோசனா சிலம்பரசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாலை துணைத் தலைவர் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் உணவு அருந்துவதற்காக சென்ற தேர்தல் நடத்தும் அலுவலர் நீலாதேவி அவர்கள் மீண்டும் பேரூராட்சி அலுவலகத்திற்கு வரவில்லை துணைத் தேர்தல் வாக்களிப்பதற்காக வார்டு உறுப்பினர்கள் காத்திருந்தனர் மாலை 5 மணி வரை காத்திருந்தும் தேர்தல் நடத்தும் அலுவலர் வராத காரணத்தினால் கருப்பூர் பேரூராட்சியில் துணைத்தலைவர் தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது