Surprise Me!

உங்களுக்கு வந்தா ரத்தம்...எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? - விஜய்க்கு சரமாரி கேள்வி

2022-04-07 1 Dailymotion

அரசு அதிகாரிகளை, அரசியல்வாதிகளை சமூக வலைதளங்களிலோ, போஸ்டர் மூலமோ, பொது வெளிகளிலோ அவமானப்படுத்தினால் விஜய் மக்கள் இயக்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள நடிகர் விஜய் அவர்கள் தனது திரைப்பட வெளியிட்டு சமயங்களில், தனக்கோ, திரைப்படத்திற்கோ கட்அவுட் வைத்து அதன் மேலேறி அதற்கு மாலை அணிவித்து, பாலாபிஷேகம் செய்கிறேன் என்கிற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வீண் வேலைகளில் ஈடுபட கூடாது எனவும், தங்களின் உயிரை துச்சமாக எண்ணி அவ்வாறு செயல்படுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி ரசிகர்களை நல்வழிப்படுத்த ஏன் முன் வரவில்லை..? அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் வந்தால் ரத்தம், ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என்றால் தக்காளி சட்னியா..? நடிகர் விஜய்க்கு பால் முகவர்கள் சங்கம் கேள்வி.

Buy Now on CodeCanyon