காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே காமராஜர் சாலையில் ஒரு கோவிலை முழுமையாக மூடி மறைத்து இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையாக மாறியுள்ளதாக ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலையதலத்தில் பதிவிட்டு இருந்தார். இதன் எதிரொலியாக இன்று காஞ்சிபுரம் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் ஐந்து பேர் கொண்ட குழுவினர் காஞ்சிபுரம் கமராஜர் சாலையில் உள்ள கோவிலை ஆய்வு மேற்கொண்டனர்.
