Surprise Me!

தடைகளை உடைத்துடும் ராகு பகவான் போற்றி - Raghu Bhagwan Kavacham /

2022-04-14 1 Dailymotion

ராகு மூல மந்திரம் :<br />ஓம் க்ரீம் க்ரீம் ஹீம் டம் டங்கதாரிணே<br />ராஹவே ரம் ஹ்ரீம் ஸ்ரீம் பைம் ஸ்வாஹா<br /><br />ராகு பகவானின் இந்த மூல மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் ராகு பகவானை மனதில் நினைத்தவாறு இந்த மூல மந்திரத்தை 108 முறை 1008 முறை துதிக்க வேண்டும். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வருகின்ற ராகு கால நேரத்தில் சிவாலயங்களுக்கு சென்று, நவகிரக சன்னதியில் ராகு பகவானுக்கு சிறிது குதிரை கொள்ளு சமர்ப்பித்து, நெய் தீபங்களேற்றி இந்த மூல மந்திரத்தை துதித்து வந்தால் ஜாதகத்தில் ராகு பகவானால் ஏற்படுகின்ற தோஷ பாதிப்புகள் குறையும். நமது வாழ்வில் குறுக்கிடும் தீய குணங்கள் உள்ள நபர்கள் விலகுவார்கள். எதிரிகளை எப்போதும் வெல்லக்கூடிய ஆற்றல் உருவாகும். வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிந்து மிகுந்த செல்வத்தை ஈட்டக் கூடிய அமைப்பு உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். நீண்ட நாட்களாக கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் சிறிது சிறிதாக அந்த வியாதிகளிலிருந்து குணமடைவார்கள். சம்பாதிக்கும் பணம் வீண் விரயமாகி சேமிக்க முடியாமல் இருந்தவர்களுக்கு செல்வ சேமிப்பு அதிகரிக்கும்.

Buy Now on CodeCanyon