Surprise Me!

தேரை வடம்பிடித்து இழுத்த விஜய் பட இயக்குனர்; வைரல் வீடியோ!

2022-04-17 6 Dailymotion

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் திருத்தேர் திருவிழாவானது நேற்றைய தினம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரை இழுத்துச் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி பூர்விகமாக கொண்ட பிரபல திரைப்பட இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தனது சொந்த ஊரான கள்ளக்குறிச்சி கவரை தெருவில் குடும்பத்தினருடன் ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் தேர் வடம் பிடித்து ஹர ஹர கோவிந்தா என்ற கோஷங்களுடன் தேர் இழுத்தார். பிரபல இயக்குனர் தனது சொந்த ஊரில் தேர் வடம் பிடித்து இழுத்துச் சென்ற இந்த நிகழ்வானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Buy Now on CodeCanyon