Surprise Me!

சங்ககரா பீடம் சுவாமியை கொல்ல சதியா? போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

2022-05-20 0 Dailymotion

கேரளா மாநிலத்தை சேர்ந்த, ஒசூர் சங்கராபீடம், சுவாமி சவுபர்நிக்கா சங்கர விஜயேந்திரபுரி (41) என்பவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் கோவை நவக்கரை பகுதிக்கு வந்துள்ளார். அவர் நவக்கரை பகுதியில் புதிய மடம் ஒன்றை கட்டும் பணியை துவக்க உள்ளார். அவருக்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தங்கியுள்ள வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட அவரது கார் மீது 2 வெடி பொருளை மர்ம நபர்கள் வீசிச் சென்றதாக க.க.சாவடி போலீஸில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வெடி பெருள் நிபுணர்கள் மற்றும் க.க.சாவடி போலீசார் சோதனை மேற்கொண்டு அந்த மர்ம பொருளை கைபற்றி விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் அங்கு கைபற்றப்பட்டது சாதாரண பட்டாசு தான் என்பது தெரியவந்தது.

Buy Now on CodeCanyon