Surprise Me!

சாய ஆலைகளுக்கு சீல்; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

2022-05-26 0 Dailymotion

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் சாய ஆலைகளில், பெரும்பாலானவை சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் காவிரி ஆற்றில் வெளியேற்றுகின்றன. இதனால் ஆற்று நீர் மாசடைகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்கள், புற்றுநோய், உடல் ஒவ்வாமை உள்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். <br />இதுகுறித்து அப்பகுதியினர் அளித்த புகாரின் பேரில் குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், விதிமுறைகளை மீறி சாய கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் ஆற்றில் வெளியேற்றிய சாய ஆலைக்கு மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை எடுத்தனர்.

Buy Now on CodeCanyon