தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடந்தால் சர்க்கரை நோய் வராதா?

சர்க்கரை நோய் பெயரில் இனிப்பு இருந்தாலும் இந்த நோய் வந்துவிட்டால்.., மக்களில் பலருக்கு மனதில் கசப்பு வந்து விடுகிறது. சர்க்கரை நோய் வந்து விட்டால்.. இயல்பான வாழ்க்கையை வாழ இயலாது. பத்திய உணவு முறையை பின்பற்ற வேண்டும். உணவு வகைகளில் சிலவற்றை முற்றாக தவிர்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக விருப்பமான உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். என பல வகையான எதிர்மறை எண்ணங்களை நம்பிக்கைகளாக வளர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் இது உண்மை அல்ல என விளக்குகிறார் சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் நல்ல பெருமாள்.

இது தொடர்பாக அவர் பேசுகையில்,'' சர்க்கரை நோய் ஒரு நோயல்ல. அது வாழ்வியல் நடைமுறை பிரச்சனை அல்லது ஹார்மோன் குறைபாடு அவ்வளவு தான். கடந்த தசாப்தங்களில் மக்கள் எங்குச் சென்றாலும், போக்குவரத்தை நம்பாமல் கால்நடையாக நடந்து செல்வதுண்டு அல்லது சைக்கிளில் செல்வதுண்டு. இதன் காரணமாக ஏதேனும் ஒரு வகையில் உடல் உழைப்பு இருந்தது. இதனை தங்களது வாழ்வியல் நடைமுறையாகவும் வைத்திருந்தனர். ஆனால் தற்போது உடல் உழைப்பு என்பது முற்றாக குறைந்துவிட்டது. பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த வாழ்க்கை நடைமுறையை பின்பற்றுகிறார்கள்.
மேலும் நகரமயமாகுதல் காரணமாக நகர பகுதிகளில் இட பற்றாக்குறை ஏற்பட்டு நடந்து செல்வதற்கும், சைக்கிளில் செல்வதற்கும் பாதுகாப்பு குறைவு என்பதால்... பெற்றோர்களே, தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு பேருந்து அல்லது வாகனத்தில் செல்ல அனுமதிக்கிறார்கள். இதன் காரணமாக பிள்ளை பருவத்திலிருந்தே உடல் உழைப்பு என்பது குறைந்துவிட்டது. மேலும் பிள்ளைகள் மாலையில் பாடசாலையில் இருந்து திரும்பிய பிறகு எம்முடைய வீதிகளில் விளையாடுவார்கள். ஆனால் தற்போது போட்டிகள் அதிகமாகி விட்டதால் அவர்கள் விளையாடும் தருணத்தை டியூஷன் வகுப்புகளுக்கு அனுப்பி விடுகிறோம். இதனால் குழந்தைகளுக்கு மேலும் உடல் உழைப்பு என்பது குறைந்து விட்டது.

பிள்ளைகள் இல்லத்தில் இருக்கும் பொழுது அவர்கள் இலத்திரனியல் சாதனங்களுடன் விளையாடுவதும், பொழுதைக் கழிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. மேலும் பல சிறார்கள் கைப்பேசி, மடிக்கணனி, ஐபேட், கணினி ஆகியவற்றின் முன் தங்களின் பொழுதுகளை கழிக்கிறார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் கூட வங்கி சார்ந்த பணிகளுக்காக அருகில் இருக்கும் வங்கிகளுக்கு நடந்து செல்வதை தவிர்த்து விடுகிறார்கள். ஏனெனில் தற்பொழுது வங்கி சார்ந்த பண பரிவர்த்தனைகளை பிரத்யேக செயலி மூலம் வீட்டில் இருந்தபடியே செய்து விடுகிறார்கள். மாணவர்கள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை நாள் முழுவதும் பரபரப்பாக இருக்கிறார்கள். ஆனால் உடல் உழைப்பு என்பது முற்றிலுமாக குறைந்துவிட்டது.

இப்படி உடல் உழைப்பு குறைந்ததன் காரணமாக எம்முடைய உடலில் இயல்பாக நடைபெற வேண்டிய மெட்டபாலிசம் எனப்படும் வளர்ச்சிதை மாற்றத்தில் சமச்சீரற்ற தன்மை ஏற்பட்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்ந்து சர்க்கரை நோய் உண்டாகிறது. தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடந்தால் சர்க்கரை நோய் வராது என்பார்கள். ஆனால் நாம் யாரும் ந்த எண்ணிக்கையளவிற்கு நடப்பதில்லை. மேலும் இது தொடர்பாக கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள https://youtu.be/IiBS6rlLTXQ எனும் இணைப்பினை கிளிக் செய்யுங்கள்.