ஆன்மிகத்தில் ஈடுபாடுடைய இருவரிடமும் பரிகாரம் என்ற பெயரில் சில யோசனைகளை உரியோர் முன் வைத்திருக்கின்றனர். அவற்றில் குறிப்பிட்ட கோயிலில் வைத்து நயன் - சிவன் ஜோடி மற்றுமொரு முறை திருமணம் செய்துகொள்வதும் அடங்கும். இதற்கு இந்த ஜோடி தயாராகி வருவதாகவும் தற்போது தகவல்கள் கசிகின்றன.

ஆனால் அப்படி திருமணம் நடந்தால் எண்ணிக்கை அடிப்படையில், அது இரண்டா அல்லது மூன்றாவதா என்ற ஐயமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விமரிசையாக நடந்த திருமணத்துக்கு முன்பே இருவரும் தனிப்பட்ட வகையில் திருமணம் முடித்து இணைந்து வாழ்ந்ததாகவும், அந்த வகையில் அடுத்து நடக்க வாய்ப்புள்ள நயன் - சிவன் திருமணம், எண்ணிக்கை அடிப்படையில் 3 என்றும் ஒரு கணக்கு சொல்கிறார்கள்.

அபிமானத்துக்குரிய நட்சத்திரங்களின் அனைத்து நகர்வுகளும், ரசிகர்கள் மத்தியில் வெகுவாய் அசைபோடப்படுவதால், நயன்தாரா விக்னேஷ் சிவனின் தனிப்பட்ட வாழ்க்கையும் அவர்களுக்கு அவலாகி வருகிறது.

#kamadenutamil #காமதேனு #Kamadenu #காமதேனுதமிழ்

Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/