Surprise Me!

இந்த வார முக்கிய நிகழ்வுகள்... முதன்மைச் செய்திகள்...

2023-03-27 4,510 Dailymotion

குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம் எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். சுமார் நான்கு ஆண்டுகளாக விசாரணையில் இருந்த இந்த வழக்கில் கடந்த 23-ம் தேதி தீர்ப்பெழுதிய நீதிமன்றம், ராகுல் குற்றவாளி என அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.<br />மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளித்ததால் ராகுல் உடனடியாக கைதுசெய்யப்படவில்லை. ராகுல் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டதால் உடனடியாக அவர் ஜாமீனில் விடப்பட்டார். ராகுலுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸார் திடீர் போராட்டங்களை நடத்தி தங்களின் இருப்பைக் காட்டிக்கொண்டார்கள்.

Buy Now on CodeCanyon