தமிழில் நடிகர் சூர்யாவுடன் 'ஏழாம் அறிவு', விஷாலுடன் 'பூஜை', நடிகர் விஜயுடன் 'புலி', நடிகர் அஜித்துடன் 'வேதாளம்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு வெளிவந்த 'உன்னைப்போல் ஒருவன்' திரைப்படத்திற்கு இசையமைத்த சுருதிஹாசன், பல்வேறு மொழிப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார்.

தற்போது தனது காதலன் சந்தனு என்பவருடன் லிவிங் டுகெதரில் ஸ்ருதிஹாசன் வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களைச் சமூக வலைதளத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், தனது காதலனுடன் படுக்கை அறையில் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் நடிகை ஸ்ருதி ஹாசன் பதிவிட்டுள்ளார். இதைக்கண்ட அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/