Surprise Me!

Akshaya Tritiya 2023#மங்களம் தரும் அட்சய திருதியை #ஆன்மீக ஞானக்களஞ்சியம்

2023-04-16 5 Dailymotion

சர்வதேச இந்துமத குருபீடாதிபதி. சபரிமலைக் குருமுதல்வர் மஹாராஜ ராஜகுரு ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் அவர்களின் சித்திரை சோபகிருது 14.04.2023 புதுவருட வாழ்த்துக்கள்
அட்சய திருதியை என்றால்‌ வளர்க என்று பொருள்‌. அட்சய திருதியை நாளில்‌ செய்யும்‌ செயல்‌ மேன்மேலும்‌ வளரும்‌ என்பது நம்பிக்கை. அட்சய திருதியை நாளில்‌ நாம்‌ வாங்கும்‌ பொருட்கள்‌ மேன்மேலும்‌ வளரும்‌. அன்றைய தினம்‌ கல்‌ உப்பு. மஞ்சள்‌ வாங்கினாலும்‌ தங்கம்‌ வாங்குவதற்குரிய பலன்கள்‌ கிடைக்கும்‌. நம்முடைய வீட்டில்‌ செல்வம்‌ பெருகும்‌.
மேலும் அட்சய திரிதியை நாள் பல ஆன்மிக சிறப்புக்களைக் கொண்ட நாளாகும். இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை வாங்கி, இல்லாதவர்களுக்கும், ஏழைகளுக்கும் தானமாக வழங்க வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால் எல்லோருக்கும் அதற்கு வசதி கிடையாது. அதனால் இந்த நாளில் அரிசி, கோதுமை, பானகம், நீர்மோர், அன்னம் (சாதம்) தானம் செய்யலாம். எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு தயிர் சாதம் கூட தானம் செய்யலாம். இதனால் நம் செல்வ வளம் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம்.

தானம் செய்வது நல்லது

அட்சய திரிதியை என்பது தானம் செய்வதற்கான நாளாகும். ஆனால் இன்று தங்கம் வாங்கி சேர்ப்பதற்கான நாளாக மாறி விட்டது. அட்சய திரிதியை நாளில் மங்கல பொருட்களை வாங்கி யாருக்காவது தானம் கொடுத்தால் மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

This video was a production from Worldkovil.com.

Visit our website:
http://worldkovil.com

Buy Now on CodeCanyon