Surprise Me!

அவிசாவளையில் தண்டவாளத்தில் எதற்காக பஸ்ஸை ஓட்டிச் சென்றான் சாரதி? பரபரப்பு வீடியோ காட்சிகள் இதோ!!

2024-06-03 2,866 Dailymotion

அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் பஸ் ஒன்றை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சாரதி எம்பிலிபிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார். கொழும்பிலிருந்து எம்பிலிபிட்டிய நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றின் சாரதியே, இவ்வாறு ரயில் தண்டவாளத்தில் பஸ்ஸை செலுத்தியுள்ளார். புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது. போக்குவரத்து நெரிசலை தவிர்த்து செல்லும் நோக்கில், பஸ்ஸின் சாரதி, பஸ் ரயில் தண்டவாளத்தில் செலுத்தியுள்ளார். இந்த நிலையில், பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பஸ்ஸை பொலிஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Buy Now on CodeCanyon