Surprise Me!

பாஜகவுடன் கூட்டணியா ? த வெ க திட்டவட்டமாக மறுப்பு! த.வெ.க துணை பொதுச்செயலாளர் அதிரடி பேட்டி !

2025-05-19 1 Dailymotion

<p>முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி இலங்கையில் போரில் உயிர் நீத்த போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியாக சென்னை தெற்கு மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக திருவான்மியூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் துணை பொது செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் மற்றும் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி ஆகியோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர் இதில் துணை பொது செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது பாஜகவுடன் கூட்டணி த வெ க திட்டவட்டமாக மறுப்பு .எங்கள் வாயில் இருந்து வரும் வார்த்தை தலைவர் சொன்ன வாரத்தை . தலைவருடைய அறிவுறுத்தலின் பேரில் தான் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்திக்கின்றனர் .எங்கள் தலைவர் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் எங்கள் தலைவர் தெளிவாக சொல்லிவிட்டார் . என்றும் பாஜகவுடன் திமுகவுடன் கூட்டணி கிடையாது என்று தெளிவாக தெரிவித்துவிட்டார் . இதில் எந்தவித மாற்றமும் இல்லை இந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய தேவை இல்லை .என்று த.வெ.க துணை பொதுச்செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் பேசியுள்ளார் . <br> </p>

Buy Now on CodeCanyon